கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இந்தியத் தத்துவங்களை அடிப்படையாகக்கொண்ட எனது ஆராய்ச்சி

கற்றல் கற்பித்தல்

இந்திய கற்பித்தல் மற்றும் கற்றல் முறை தத்துவ நூல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மொழிகளைக் கற்றுக்கொள்வதில் உச்சரிப்பின் துல்லியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, எனவே பேசும் போது வார்த்தைகளைத் துல்லியமாக உச்சரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. தவறான உச்சரிப்புக்கு மன்னிப்பு இல்லை!
கற்றல் கற்பித்தல் சூழலில், வாய்வழி கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இம்முறையானது மேற்புறக் கற்றல் என்று தவறாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாணவன் பெற்றுக்கொண்ட அரிவினை எவ்விடத்திலும், எக்காலக்கட்டத்திலும் புரிதலுடன் வழங்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அறிவு ஒருவரது நாக்கின் நுனியில் இருக்க வேண்டுமே தவிர, பனை ஓலைகளில் அல்ல என்பதே நம்பிக்கை.