நாளேடு
தொடர உங்கள் ரகசியக் குறியீட்டை உள்ளிடவும்
இன்றைய சிந்தனை 💡
புதிய பதிவு
தேடுக
நோக்கம் மற்றும் அறிமுகம்
தினசரி நிகழ்வுகளை நடக்க-நடக்கப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பக்கம் எனக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டு முறை:
௧. தாங்கள் பயன்படுத்த விரும்பினால் தொடர்புக்கு பக்கத்தின் வாயிலாக நாளேடு பயன்படுத்தவேண்டும் என்று கோரிக்கை அனுப்பவும்.
௨.பிறகு , தங்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அக்குறியீட்டை பயன்படுத்தி நீங்கள் உள்நுழையலாம்
௩. நிகழ்வுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து பொருத்தமான ஒன்றை தேர்வுசெய்தப் பிறகு, நிகழ்வு என்கின்ற பகுதியில் அதற்கான விவரங்களை தாருங்கள். அந்நிகழ்வுகள் குறித்து ஏதேனும் குறிப்புகள் இருந்தால், குறிப்புகளில் உள்ளிடுக. ‘சேமி’ என்ற பொத்தானை அழுத்தினால் பதிவு சேமிக்கப்படும்.
தங்களுக்கு ஏதேனும் தேடவேண்டுமெனில், வகையைத் தேர்ந்தெடுத்து தேடு என்ற பொத்தானை அழுத்தினால் அதற்கான பட்டியல் வெளியிடப்படும். தங்களின் விருப்பத்திற்கேற்ப அச்செடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு:
நிகழ்வு நேரம் தானாக சேமிக்கப்படுவதால் நேரம் தேர்ந்தெடுக்க வசதி இல்லை. சில நேரங்களில் தாங்கள் காலதாமதமாகப் பதிவு செய்தால் குறிப்புகளில் குறிப்பிடலாம். இந்த பக்கமானது ஒரு செயல் செய்யும் முன் அல்லது செய்த சற்று நேரத்திற்குபின் பதிவிடவேண்டும் என்பதால், மிகவும் காலதாமதமானப் பதிவுகளைத் தவிர்க்கவேண்டும். அப்படி சில நிகழ்வுகள் அல்லது சூழல்களில் செய்ய இயலவில்லை என்றால் அதே நாளில் பதிவுகளை உள்ளிடப் பரிந்துரைக்கப்படுகின்றது. தமிழ்மொழியில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும் என்பதையும் நினைவிற் கொள்க. இப்பக்கம் பயன்பாட்டாளர்களின் இருப்பிடம் போன்ற விவரங்கள் ஆய்வுக்காக மற்றும் பயன்பாட்டை ஆராய்வதற்காக சேகரிப்பக்கப்படலாம்.