கணக்கெடுப்பு
என்னுடைய ஆராய்ச்சிகானக் கணக்கெடுப்பில் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த ஆய்வில் பங்கேற்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாகும். இந்த கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலோ தவறான பதிலோ கிடையாது. உங்கள் பழக்க வழக்கங்களுக்கேற்ப பதிலளித்தால் போதுமானது. கணக்கெடுப்பு முடிந்ததும் கூடுதலாக சில கேள்விகள் கேட்கப்படும். எ.கா: உங்கள் மின்னஞ்சல், பெயர், மற்றும் கருத்தரங்கத்தில் பங்கேற்பதற்கான விருப்பம். இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது கட்டாயம் அல்ல. நீங்கள் அளித்துள்ள பதில்களுக்கேற்ப முடிவு காட்டப்படும். அந்த முடிவை நீங்கள் ஏற்கறீர்களா என்பதை நேர்மையாகச் சொல்லுவது மிகவும் அவசியம். ஆராய்ச்சி தரவுகள் சீராகவும் நேர்மையாகவும் வைத்துகொள்ள மற்றும் துல்லியமான முடிவுகளுக்கு வர உங்கள் ஒத்துவுழைப்பை கேட்டுகொள்கின்றேன். இந்த ஆராய்ச்சி எல்லா மொழிபேசுபர்களுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தாய்மொழி, ஆட்சிமொழி, வசிக்கும் இடம் போன்ற வார்த்தைகளைப் பார்த்தால் உங்களது தாய் மொழி, வாழும் ஊரின் ஆட்சிமொழி என்று எடுத்துகொள்ளவேண்டும். அதே மாதிரி, சில கேள்விகளுக்கு எல்லாம் பொருந்துகின்ற மாதிரி தோன்றும் ஆனால் அதிலும் அதிகம் பொருத்தமானதை தேர்வுசெய்ய வேண்டும். இந்த கணக்கெடுப்பு துவங்கும் முன் தங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் என்னை தொடர்புக்கு என்கின்ற பக்கத்தின் வாயிலாகத் தொடர்புகொள்ளும்படி கேட்டுகொள்கின்றேன். நன்றி!
குறிப்பு: வகுப்பில் அல்லது கலந்துரையாடலின் ஒரு பகுதியாக இந்த கணக்கெடுப்பச் செய்யச் சொன்னால் அது ஆய்வில் கணக்காகாது.
சமர்பித்தலுக்கு பிறகு தயவுச் செய்து கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றது.