நோக்கம் மற்றும் அறிமுகம்
பொதுவாக எந்தவொரு சமர்பித்தலும் உலகத்தின் ஏதோ ஒரு பெரும்பான்மை மொழியில் தான் சமர்பிக்கப்படும். தமிழ் மற்றும் வெல்ஷ் பேசும் பகுதிகளில் அவரவர் தாய்மொழியில் (எ.கா தமிழ்நாட்டில் தமிழும் வேல்ஸில் வெல்ஷும்) சமர்பிக்க இது போன்ற தொழில்நுட்பம் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகின்றேன். தாய்மொழியில் சமர்பிப்பது அல்லது சமர்பிக்க விரும்புவது இதர மொழிகளை நிராகரிப்பது அல்ல. இம்மாதிரியானத் தொழில்நுட்பம் சிறுபான்மைமொழிகளை அதிகப் பயன்படுத்த ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகின்றேன். இது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் மொழிபெயர்ப்புகளில் சிக்கல ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மொழிச் சார்ந்த தொழில்நுட்பத்தில் அதிலும் குறிப்பாகத் தமிழில் நாம் செய்ய வேண்டியது கடலளவுள்ளது. இவையெல்லாற்றுக்கும் முதற் படி - மொழியைப் பயன்படுத்துவது! நான் முயற்சியை மேற்கொல்கின்றேன். நீங்கள்? இந்த பக்கத்தை உங்கள் சமர்பித்தலுக்கு பயன்படுத்த தொடர்புக்குப் பக்கத்தின் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.