தொழில்நுட்பக் கருவிகளில் தமிழ் உள்ளீடு
பொதுவாகவே தொழில்நுட்பம் என்றதுமே முதலில் நினைவிற்கு வரக்கூடிய மொழி ஆங்கிலமே. ஒரு மொழியின் வளர்ச்சி அல்லது அதன் வீழ்ச்சி அம்மொழிப் பேசும் மக்களிடம் உள்ளது என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. காலத்திற்கேற்ப நாம் மாறவேண்டும் என்று எண்ணுகிறோம் ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடாக நாம் வளர்கிறோமா என்பதை சிந்திக்கும் தருணம் இது.
இந்நூற்றாண்டில் தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் அறிவோம். அதில் ஒன்று தமிழில் தொழில்நுட்பம். இக்காலக்கட்டத்தில் தொழில்நுட்பக் கருவிகளில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான விசைப்பலகை உள்ளன. தமிழ் விசைப்பலகை பயன்படுத்தத் தெரியாத நபர்களுக்காக ஒலிபெயர்வு விசைப்பலகைகள் உள்ளன.
இச்சூழலில் தமிழர்கள் தொழில்நுட்பக் கருவிகளில் தமிழை ஏன் பயன்படுத்துவது இல்லை? (இதற்கு விதிவிலக்கு உண்டு). உங்கள் கருத்துகளை வரவேற்க்கபடுகின்றன.