தமிழில் சிந்திப்பது
நாம் அனைவரும் எந்நேரமும் எதாவுது சிந்தித்துகொண்டு தான் இருக்கின்றோம். அது உணவு விஷையமாகட்டும், படிப்பாகட்டும், வேலையாகட்டும். எந்த மொழியில் நாம் சிந்திக்கின்றோம் என்பதை எண்ணினதுண்டா?
ஒரு மொழி மட்டும் அறிந்தோருக்கு பெரும்பாலும் சிக்கல்கள் இருக்காது. ஏனெனில் அவர்கள் சிந்திக்கும் மொழியில் தான் தன் கருத்தினை வெளிப்படுத்துவர். ஆனால் இரு மொழி அல்லது பண்மொழி அறிந்தோருக்கு இது சில வேளைகளில் சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடும். பல மொழிகள் அறிந்த மக்கள் மத்தியில் மொழிக்கலப்பு இயல்பானதாக இருந்தாலும் கூட மொழி மீது பற்றுள்ளவர்கள் கலப்பின்றி பேச்சு இருத்தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்தளவிற்கு சாத்தியம்? உங்கள் கருத்தில் இது தேவை இல்லையென்றால், தின்சரி வாழ்க்கையில் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் போது தடையின்றி பிற மொழி கலப்பின்றி தங்களால் கருத்து பரிமாற்றம் செய்ய இயலுமா? உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பதிவிடுக.