புது தில்லி பயணக்குறிப்புகள்

வருடம்: சுபகிருது; மாதம்: கார்த்திகை

இந்தியாவின் தலைநகரமான புது தில்லிக்கு ஏறாளமானவர்கள் வந்து செல்வர். பலத்தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இந்நகரத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்கின்றேன்.

வினமான நிலையம்: இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்

அலுவல் மொழிகள்: இந்தி மற்றும் ஆங்கிலம்; அதைத்தவிர பஞ்சாபி மற்றும் உருது மொழிகள் பெரும்பாலும் பேசுவதை கேட்கலாம்.

விடுதிகள்: எல்லாத் தரப்பட்ட மக்களுக்கேற்ப பல விலைகளில் கிடைக்கும். ஹன்ஸ் (கனாட் ப்ளேஸ்) மத்திய தில்லி பகுதியில் ஒரு நல்ல விடுதியாகும். விலை சுமார் ரூ 8000 முதல் துவக்கம். காலை சிற்றுண்டி கிடைக்கும் ஆனால் அதற்கு தனி கட்டணம். எனவே வேண்டுமெனில் அதை எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் வெறும் அறைக்கான கட்டனத்தை செலுத்தி இருந்துக்கலாம்.

சைவ உணவகங்கள்: வட இந்தியாவை பொறுத்த வரையில் சைவ உணவககங்களுக்கு பஞ்சமில்லை. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க வேண்டுமெனில் ஜெயின் சாப்பாட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் “கனாட் ப்ளேச்” இல் அமைந்துள்ள தென்னிந்திய உணவகமானது ஜகர்நாட் இல் தான் எல்லா வேளைகளுகம் சாப்பிட்டோம். சற்று விலை உயர்ந்த உணவகமாக இருந்தாலும் கூட நல்ல தரத்தில் வழங்கினர்.

போக்குவரத்து: சென்னை போல் உள்ளூர் தொடர்வண்டி, பேருந்துகள் இருக்கின்றன. சுற்றுல்லாவிற்கு வரும் போது “கார்” வாடகை எடுத்து எல்லாந் இடங்களையும் பார்ப்பது எளிதாக இருக்கும். ஒரு நாளுக்கு ரூ2,000 முதல் 2,500 வரை ஆகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்: குதுப் மினார், பாறாளமன்றம், இந்தியா “கேட்”, லால் கிலா, சாந்த்னி சௌக், லோடஸ் கோவில், ராஜ்காட் போன்றவை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை.

அக்கம் பக்கம்: ஆக்ரா, மதுரா-விருந்தாவன், சண்டிகர் ஆகிய நகரங்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்குள் சென்றடையலாம்.

Previous
Previous

பாலி அனுபவம்…

Next
Next

தமிழில் சிந்திப்பது