பாலி அனுபவம்…

Selamat Datang Indonesia!

வருடம்: சுபகிருது மாதம்: மாசி

இலண்டனில் இருந்து சிங்கப்பூர், கோலலம்பூர், ஜகார்த்தா வழியாக பாலி டென்பசாருக்கு நெறையா விமானங்கள் இருக்கின்றன. நாங்கள் சிங்கப்பூர் வழியாகச் எல்லும் விமானத்தை தேர்ந்தெடுத்தோம்.

விமான நிலையன்: நூறா ராய் பன்னாட்டு விமான நிலையம்.

நாடு: இந்தோனேசியா; அலுவல் மொழி: பாஷை இந்தோனேஷியா, பாலினீச்; சொந்த மொழி: பாலினீச்.

நாணயம்: இந்தோனேஷிய ரூபாய் ; சமயம்: இந்து (பெரும்பான்மை)

பாதுகாப்பு: இரவு நேரங்களில் குறிப்பாக தெரு விளக்குகள் இல்லாத இடங்களில் நடமாட வேண்டாம். பகல் நேரத்தில் ஓரளவிற்கு நல்ல பாதுகாப்பக உள்ளது. இரவு நேரங்களிலும் பரபரப்பான இடங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் நல்ல பாதுக்காப்பு உள்ளது.

வானிலை (பொது): சென்னை போல் எதிர்பார்க்கலாம். ஈரப்பதம் குறைவு. ஆனால் நாங்கள் சென்ற போது மாலை/இரவு நேரங்களில் நல்ல மழை இருந்தது. எனவே குடை மிகவும் முக்கியம்! எப்போ மழை பொழியும் என்று தெரியாது!

தங்கும் விடுதிகள்: பாலி தீவானது சுற்றுல்லாவுக்கு புகழ்பெற்ற இடமாக அமைந்துள்ளது. பல வகை விடுதிகள், சொகுசு விடுதிகள், கடல்ஐ பார்த்திருக்கும் விடுதிகள் என பல வகை விடுதிகள் உள்ளன. இருப்பினும் சைவ உணவு விரும்புவோருக்கு குதா என்கின்ற பகுதியில் விடுதியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஹாலிடே இன், ரிசாதா, போன்ற பல சொகுசு விடுதிகள் இப்பகுதியில் காணலாம். இந்திய உணவு அதிகம் (அதிலும் சைவ உணவு) இருப்பதாலோ என்னமோ, இங்கு இந்தியர்களை அதிகம் காணலாம்.

சுற்றுல்லா: பாலியில் பெரும்பாலும் தங்கும் விடுதியில் உள்ள வரவேற்பு பகுதியில் அங்கீகாரம் பெற்ற சுற்றுலா ‘கார்கள்’ வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளுக்கு சுமார் 10,00,000 இந்தோனேஷியா ரூபாய் வரை செலவாககூடும். நான் சொல்லுவது காருக்கு மட்டும். நுழைவுக்கட்டணம், சாப்பாடு செலவு போன்றவை தனி ஆகும்.

பார்க்கவேண்டியது: கெச்சக் நடனம் (உலுவாத்து), குளம்பி தோட்டம், அரிசி வயல்கள், சிற்பகலைகள், நெசவு செய்யும் இடம், கோவில்கள், சாக்லேட் தொழிற்சாலை.

வாங்கவேண்டியவை: பாலி சாக்லேட், குளம்பி, கையால் செய்யப்பட்ட பொருட்கள்

சுவைத்து பார்க்கவேண்டியது: நசி கோரெங் (சைவம்)

கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள்: எளிமை, சுய மரியாதை, பார்ம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் வாழுதல்.

ஒவ்வொருவரின் பொருளாதார கட்டுப்பாடு மற்றும் விடுமுறையை பொறுத்து பாலியில் குறைந்தது மூன்று நாட்கள் முதல் அதிகபட்சம் பத்து நாட்கள் வரை செலவழிக்கலாம். சுருக்கமா சொல்ல போனால், எவ்வளவு தடவ சென்றாலும் அலுக்காமல் இருக்கும் இடம் - பாலி!

Previous
Previous

مرحبا! மர்ஹபா! எதிஹாதின் உயர் வகுப்பு அனுபவம்…

Next
Next

புது தில்லி பயணக்குறிப்புகள்