தேம்ஸ் நதியில் ஒரு படகு சுற்றுல்லா
நதியில் இருந்தபடி நகரத்தை ரசிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு!
இலண்டனில் வர்த்தகப் பகுதி
படகுப்போக்குவரத்து அல்லது கப்பலில் போவது என்பது நறையா பேரின் கனவு- அது ஒரு மணி நேரமாக இருக்கட்டும், ஒரு நாளாக இருக்கட்டும் அல்லது ஒரு மாதமாக இருக்கட்டும். அதிலும் பெயர் பெற்ற ஆறுகளில் படகில் சுற்றிப்பார்ப்பதும் ஒரு அனுபவம் தான். சென்ற வருடமே நாங்கள் தேம்ஸ் ஆற்றின் படகு சுற்றுல்லாவுக்குச் செல்ல முன்பதிவு செஞ்சோம் ஆனால் போக்குவரத்து நெரிசலின் காரணமாக எங்களால் நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. அதுனால சென்ற வருடம் அந்த வாய்ப்பை தவரவிடும்படி ஆகிவிட்டது. சில வேளைகளில் சில தவறுகளின் காரணத்தினால் சிலவற்றை செய்யமுடியாமல் போகிவிடும். அந்த நேரங்களில் செய்த தவறுகளை உணர்ந்து அடுத்த முறை அதை சரிசெய்துகொள்வதின் தான் நம் முன்னேற்றம் உள்ளது. அதற்கேற்ப இந்த முறை செல்லும்போது நாம் செம்மையாகத் திட்டம் போட்டு சென்றோம். கையில் என்னதான் வளர்ச்சியடந்த நாடாக இருந்தாலும் இங்கு காலதாமதம் நிகழ்கிறது என்று சொன்னால் பலருக்கு ஆச்சிரியம் அளிக்கும். எனவே நேரங்களை கணக்கிட்டு நாம் கூடுதலாம் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வைத்துச் சென்றோம்.
படகு புறப்படும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே வரிசையில் இருக்க வேண்டும். எனவே செல்லத் திட்டமிட்டீர்களென்றால் உங்கள் சீட்டை நன்கு படியுங்கள். நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் இருந்தனர். இருந்தாலும், மிக சுமூகமாக இருந்தது. படகில் இருக்ககள் முன்பதிவுச்செய்யப்படவில்லை, செய்வதற்கான வசதியும் இல்லை. எனவே வரிசையில் முன்னாடி இருந்தால் ஏறினவுடன் எங்க உட்காரலாம் என்று நீங்க தீர்மானிக்கலாம். அதே பின்னாடி இருந்தால் எங்க உட்கார வேண்டும் என்று மக்கள் தீர்மாத்திருப்பார்கள்! எனவே இந்த பார்வையில் இருந்து பார்க்கும்போதுகூட முன்னாடியே செல்வது நமக்கு நறையவிதத்தில் நன்மையளிக்கும்.
படகின் மேற்பகுதியில் இருந்து
படகில் மேலிலும் அமரலாம் கீழும் அமரலாம். சொல்லப்போனால் இரண்டடுக்கு படகு என்று சொல்லலாம். வானிலையைப் பொறுத்து மேலயா, கீழயா என்று முடிவுசெய்துகொள்ளலாம். நாங்கள் சென்றபோது நல்ல வெயில் இருந்ததால் படகின் திறந்தப் பகுதியில் உட்கார முடிவெடுத்தோம். படகில் நல்ல விஷயம் என்னவென்றால் நகரத்தின் வரலாற்றை சொல்லிக்கொண்டே வருவர். பாலத்திற்கு கீழே செல்லும்போதெல்லாம் பாலத்திற்கு மேல் உள்ள மக்களிடம் கைகளை தூக்கி காட்டிச் சென்றோம். அங்கேர்ந்தும் மக்கள் நம்மளப் பார்த்து உற்சாகப்படுத்தினர். இதை செய்யும் போது எனக்கு இந்தியாவின் இரயில் பயணம் நினைவிற்கு வந்தது. எப்படி ரயில் நிலையஙக்ளை கிட்ட நெருங்கும்போது வெளிய இருக்கற மக்கள் நம்மளப் பார்த்து கைக்காட்டுவாரோ கிட்டத்தட்ட அதே மாதிரியான அனுபவம் கிடைத்தது. சிறுவர், முதியோர் என வயது பாகுபாடின்றி அனைவரும் அந்நொடையை அனுபவித்தனர். வரலாறு சொல்லிக்கோண்டே வரும்போது தான் நான் அறிந்தேன் ஒரு காலத்தில் தேம்ஸ் ஆறும் சென்னையின் கூவம் போல் கழிவு நீராக பல ஆண்டுகள் இருந்தது. ஆனால் அரசு மற்றும் மக்களின் காரணமாக அதை தீவிரமாகத் தூய்மைப்படுத்தினர். முன்ன இருந்தத்திற்கு இப்போ தூய்மையாக இருக்கு என்று அவர் கூறினார். நாற்பதி ஐந்து நிமிடங்கள் போனதே தெரியல. ஒரு சிறு பயணமாக இருந்தாலும், இலண்டன் சுற்றிப்பார்க்க வரும் அனைவருக்கும் நான் இதை பரிந்துரிப்பேன்.
விலை: £15 முதல்; மொத்த நேரம்: நாற்பது நிமிடங்கள். என்னுடைய மதிப்பீடு: நான்கு நட்சத்திரங்கள்.
உங்கள் கேள்வி மற்றும் கருத்துகளை தமிழில் வரவேற்கின்றேன்.