வேதவள்ளியின் மடப்பள்ளி- சென்னை

சாப்பாடுடன் கலாச்சாரமும் பண்பாடும் நிறைந்த உணவகம்!

பாரம்பரியம் நிறைந்த ஓவியங்கள்

இக்காலத்தில் வெளியே சென்று சாப்பிடுவது என்பது ஒரு பொழுதுப்போக்காகவே மாறிவிட்டது. அதிலும் பலவிதமான உணவகங்கள் வந்துள்ளன. ஆனால் மேற்க்கத்திய கலாச்சாரத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. இது உலக்கெங்கும் பொருந்தும் என்று நான் நினைக்கின்றேன். எப்படி நாம் மேற்க்கத்திய கலாச்சரத் தாக்குதலைப் பற்றி பேசுகின்றோமோ அதே போல வெளிநாடுகளில் வாழும் மக்கள்கூட தமது கலாச்சாரம் தளர்ந்துபோகிவிட்டுது என்று கூறுவதும் உண்டு. முன்னெல்லாம், வெளிநாடுகளில் நம்ம ஊரு சாப்பாடு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் இப்போ ஊரைப் பொருத்து சரவண பவன், வசந்த பவன், ஆரிய பவன், சங்கீதாவென நம்ம சுவைக்கேற்ப, தரம் குறையாத, குறைந்த் விலைக்கு கிடைக்கின்றது. உணவில் மாற்றங்கள் ஒரு பக்கம். அதாவுது புதிய-புதிய உணவை உருவாக்குவது, நாமும் புதிய-புதிய உணவை சுவைத்து பார்க்கலாம் என்ற மனநிலையில் இருப்பது. மற்றொன்று, உணவகங்களின் வாயிலாக ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பது. வெதவள்ளியின் மடப்பள்ளி உணவுடன் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று நான் சொல்லுவேன்.

உணவகத்தின் நுழைவு

சொல்லப்போனால் ஒரு வீட்டை உணவகமாக மாற்றியுள்ளார்! அப்போதுதான் வருபருக்கு அந்த அனுபவம் கிடைக்கும். துளசிச் செடியில், இருந்து, செம்மண் தரை, பூஜை அறை, கோலங்கள் வரை அனைத்துமே ஒரு ஐயங்கார் வீட்டின் அனுபவத்தை ஏற்படுத்தி தருகிறது. இவ்வுணவகத்திற்குச் செல்ல வேண்டுமெனில் முன்பதிவு அவசியம். நாம் சென்றபோது உணவுப்பட்டியல் என்பது பெரிதாக ஒன்றும் இல்ல. முன்பதிவுச் செய்யும்போதே அவர் நம்மிடம் என்ன இருக்கு என்று சொன்னார், அதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்தோம். கிழே உணவகமும், மாடியில் புடவைக்கடை மற்றும் விற்பனைக்கான பொருள்கள் உள்ளது. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களைப் பார்க்கும்போது நம்மை அக்காலத்தின் நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.

பழங்காலத்து மின்விசைகள்!

இந்த மின்விசைகளைப் பார்க்கும் போது என்னுடைய சின்ன வயதில் வீடுகளில் இம்மாதிரியான மின்விசைகளைப் பயன்படுத்தினதை நினைவிற்கு வந்தது. தொழில்நுட்பம் வேகமாக வளரும் காலத்தில் பழை வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதும் ஒரு தனி சுவை தான்! அச்சுவையும் உணவுடன் பரிமாறுகிறது இவ்வுணவகம்.

குறித்தெ நேரத்தில் நாங்கள் உள்ளே சென்றோம். அங்குள்ள ஊழியர் எங்களை வரவேற்த்து எங்களுக்காக முன்பதிவுச் செய்யப்பட்ட இருக்கையில் அமரச் சொன்னார். முதலில் ஒருவர் வந்து என்னென்னல்லாம் இருக்கிறது எப்போது கொண்டு வரப்படும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார். பின்னர் சில நிமிடங்களில் முதலாவுது சுற்று உணவைக் கொண்டு வரப்பட்டது. ரொம்ப அதிக சாப்பாடு என்று சொல்ல முடியாது ஆனால் எனக்கு ஓரளவுக்கு வயிறு நிறையும்படி இருந்தது. இதுவே சிலபேருக்கு கம்மியாக இருக்கு என்று நினைக்கலாம்.

எங்களுக்கு கிடைத்த முதண்மை உணவு

என்னை போல் சிறு அளவில் அதிக வகைகள் சாப்பிட விரும்பும் நபர்களுக்கு இது நன்றாக இருக்கும். உபசரிப்பில் குறை இல்லை ஆனால் சென்னையில் அமைந்திருக்கும் இவ்வுணவக்கித்ல் தமிழை என்னாலப் பார்க்க முடியவில்லை. அது மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்ய நான் கடமைப்பட்டிருக்கின்றேன். மொழி இல்லாமால் கலாச்சாரம் கிடையாது என்பது என்னுடைய நம்பிக்கை. கலாச்சாரத்திற்கு அடிப்படை மொழி என்று நான் நினைப்பவன். எனவே இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியமானச் சூழிலில் ஆங்கிலம் மொழி தேவையற்றது என்பது என்னுடையக் கருத்து.

சில உணவ்கங்கள் சுவைக்காக திரும்பத்திரும்ப போகலாம், சில உணவகங்கள் அனுபவத்திற்கு போகலாம், சில உணவகங்கள் அவர்களின் புதுமையை ரசிக்க போகலாம். அவ்வரிசையில், என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் இவ்வுணவகத்தின் பாரம்பரிய அமைப்பை ரசிக்க ஒரு முறை சென்று அனுபவிக்கலாம். விலையைப் பொறுத்த வரை சற்று அதிகம் என்று சொல்லுவேன் ஆனால் அந்த அனுபவத்திற்கு கொடுக்கலாம்.

நீங்கள் இந்த உணவகத்திற்கு சென்றிருக்கறீரென்றால் உங்களது அனுபவம் மற்றும் கருத்துகளை அன்புடன் வரவேற்கின்றேன்.

Next
Next

மலைகளின் இளவரசி- கொடைக்கானல் பயணக்குறிப்பு மற்றும் அனுபவம்