மலைகளின் இளவரசி- கொடைக்கானல் பயணக்குறிப்பு மற்றும் அனுபவம்
நெகிழித் தடைச் செய்யப்பட்டப் பகுதி.
கொடைக்கானல் நுழைவு
தென்னிந்தியாவின் மலைகளின் இளவரசி என்ற பெயர் கொண்டுள்ளது கொடைக்கானல். சார்வரி வருடம் ஆடி மாதம் கொடைக்கானலுக்கு மகிழுந்து வாயிலாக செல்லத் திட்டமிட்டோம். மகிழுந்துவில் சென்றதால் ஆங்காங்கே நிறுத்தி இயற்கையை ரசித்து, தேநீர், “மேகி” சாப்பிட்டுக்கொண்டு, பாட்டு கேட்டுகொண்டேச் சென்றோம். ஆடி மாதம் மழைக்காலம் என்று நான் எங்கோ படித்தேன். மலைச்சரிவு ஏற்ப்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதெல்லாம் முன்னதாகவே படித்தறிந்தப் பின் அப்பகுதிக்குச் செல்லும் போது என்ன தான் இயற்கை அழகாக் இருந்தாலும் மனதோரத்தில் ஒரு சின்ன பயமும் இருக்கும்! “கடவுளே மழை பொழியாமல், நிலச்சரிவு ஏற்படாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்!’ என்ற வேண்டுதல் தான் இருக்குமேத்தவிர, “ஆஹா! எந்த அருவு எவ்வளவு அழகாக இருக்கு பாரு” என்று சொல்லி ரசிக்க மனசு வராது! நாங்கள் இரண்டு நாள்களுக்காகச் சென்று வரத் திட்டமிட்டிருந்தோம். வழி முழுக்க நல்ல வானிலை இருந்தது. மேகமூட்டம் இருந்தாலும் மழை பொழியவில்ல. கொடைக்கானல் நுழைவு வந்ததும் வாகனங்களின் நீண்ட வரிசையைக் கண்டோம். எதற்காக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்ல. கிட்ட நெருங்கும்போது தான் அறிந்தோம், கொடைக்கானலுக்குள் நெகிழிப் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று. அதுனால் அங்குள்ள ஊழியர் ஒவ்வொரு வண்டியாக வந்து சொதனை செய்தனர் மற்றும் அறிவுரை கூறிச் சென்றனர். கூடவே ஏதேனும் நெகிழி இருந்தால் கையோட எடுத்துச் சென்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது எங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால், நெகிழிப் பயன்படுத்த கூடாது என்று ஆணையிடுவது ஒன்று ஆனால் இட்ட ஆணையை நடைமுறைப்படுத்துவது மற்றொன்று. எங்களுக்கு ஆணையைவிட அந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக்காட்டிய அரசின் நடவடிக்கையைப் பாராட்டி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் ஒரு கேள்வி பிறந்தது “ஊ.ஸ். நுழையும்போதே இவர் எல்லோரிடமும் நெகிழை வாங்கிவிட்டு அனுப்புறாரே, ஆப்போ உள்ளே நெகிழியே பயன்படுத்துவதில்லையா? எப்படி என்று பார்போம் என்ற மன நிலையிடம் உள்ளே சென்றோம்.
மலைகளுக்கு மேலே எங்கள் விடுதி இருந்தது. கண்டுப்பிடிக்க சற்று கடினமாக இருந்தாலும் இங்க சுற்றி-அங்க சுற்றி இறுதியில் கண்டிப்பிடித்து சென்றடந்தோம். சென்றவுடன் அங்கு உள்ள ஊழியர்கள் எங்களை வரவேற்று எங்களின் அறைக்கு அழைக்குச் சென்றன. மிக பிரம்மாண்டமான அறை கிடைத்தது எங்களுக்கு. நாலாந் பக்கமும் சாளரங்கள். அதில் இருந்து வெளியே மலைகளின் அழகு. மேகம் வந்து செல்வது மலைகளை முத்தமிட்டு செல்வது போல் காட்சி. காண்பதற்கு கண்கள் வேண்டும் என்று சொன்னாலும் அனுபவிக்க நல்ல உடலாரோக்கியம் வேண்டும் என்று சொல்லியாக வேண்டும்! தமிழரின் விருந்தோம்பலுக்கேற்ப, வந்தவுடன் நம்மிடம் “சாப்பிட என்ன வேணும்” என்று கேட்டு எங்களுக்கு சமைத்து கொடுத்தனர். அதன்பின் நாம் நகரத்தை சுற்றிப் பார்க்க மாலை நாலு மணியளவிற்கு புறப்படுச் சென்றோம்.
விடுதி அறைக்குளில் இருந்து தெரிந்த காட்சி
நெகிழி இல்லா கொடைக்கானலின் விழிப்புணர்வு விளம்பரம். அதன் கீழுள்ளக் கடைகளில் கடைப்பிடிப்பதை காணலாம்.
மாலை நாலு மணிக்கு சென்றதால் ஓரிரு மணி நேரத்தில் இருள் சூழந்துவிட்டது. அப்பறம் என்ன? திரும்ப விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு உறங்கச் சென்றோம். மறு நாள் காலையில் சிற்றுண்டிக்கு பிறகு சற்று விரைந்து புறப்பட்டோம். கொடைக்கானல் ஏரி, பூங்கா, அருவி மற்றும் குனா குகைக்குச் சென்றோம்.
கொடைக்கானல் அருவிக்கு அருகில் இருக்கின்ற கடைகளில் ஒன்று. இங்கு அருமையான “மேகி” மற்றும் சூடானத் தேநீர் குடித்தோம்.
கொடைக்கானலில் ஏராளமான சுற்றுல்லாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு இருந்து வாங்கும்படியாக பல பொருள்கள் இருந்தாலும்கூட நான் தனிப்பட்ட முறையில் ஒன்றும் வாங்கவில்லை. ஆனால் வாங்க வேண்டியது நறையா இருக்கின்றது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மிட்டய்கள், பைகள் மற்றும் குளம்பி/ தேநீர் வகைகள். விலை சற்று அதிகமாக இருப்பதாக நான் நினைத்தேன் ஆனல் கொஞ்சம் யோசித்து பார்த்தால் அவருக்கும் அந்த ஆகிவிடும் அல்லவா? எனவே கூடுமான வரைக்கும் ஞாயமான விலையைக் கேட்டால் நான் அதிகம் குறைக்கச் சொல்வதில்லை.
கொடைக்கானலுக்குச் செல்ல வேண்டுமெனில் மதுரை, திண்டுக்கலில் இருந்து எளிமையான முறையில் செல்லலாம். மதுரையில் இருந்து ஒரு நாள் சுற்றுல்லா இயங்குகின்றது, ஆனால் தனிப்பட்ட முறையில் செல்ல வேண்டும் என்றால் கொடைக்கானல் ரோடு என்றே ரயில் நிலையம் உள்ளது. அங்கு இறங்கலாம் அல்லது திண்டுக்கலில் இறங்கிச் செல்லலாம். ஆனி/ ஆடி மாதங்களில் வருவது தவிர்ப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்- மழை காலம் என்ற ஒரே காரணத்திற்காகச் சொல்கிறேன். ஆனால் உங்களுக்கு மழைக்காலம் அனுபவிக்க வேண்டுமெனில் அது தான் உகுந்த மாதமாகும்.
உங்கள் கருத்துகள், கொழைக்கானல் பயண அனுபவங்கள் மற்றும் கேள்விகளை அன்புடன் வரவேற்கின்றேன்.