தமிழ் தட்டச்சு பயிற்சிக்கு அன்புடன் வரவேற்கின்றேன்!
நோக்கம் மற்றும் அறிமுகம்
இன்றையக் காலக்கட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப திறனும் அறிவும் மிக முக்கியமானதாகும். தமிழை பேசினால் மட்டும் போதாது. தொழில்நுட்பத்தில் தமிழ் வளரவேண்டுமெனில் தமிழ்மொழி இணையத்தில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி தமிழர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது தமிழே முதல் மொழியாக இருக்க வேண்டும். ஆனால், உலகத்தில் பல நாடுகளில் வாழும் கோடானக்கோடி தமிழர்களில் பலருக்கு தமிழ் பேசத் தெரியும் ஆனால் அதில் சிலருக்கு எழுத படிக்க தெரியாது, பலருக்கு எழுத படிக்கத் தெரியும் ஆனால் அதிலும் கணினி அல்லது மின்னணுக்கருவிகளில் தட்டச்சு செய்யத் தெரியாது. அனைவருக்கும் இத்திறனை அறிமுகப்படுத்தி, பயிற்ச்சி அளித்து அதில் தேர்ச்சி பெற உதவி அளித்து இயன்ற வரை அனைவரையும் மின்னணுக்கருவிகளில் தமிழை அதிகளவு பயன்படுத்தும் நிலையை உருவாக்கும் நோக்கத்தில் இப்பக்கத்தை அறிமுகம் செய்துள்ளேன்.
குறிப்பு: இந்த பக்கம் சோதனை நிலையில் உள்ளது. சில பொத்தான்கள் வேலை செய்யாமல் இருக்கக்கூடும் ஆனால் பிரதானமான செயல்பாடு வேலை செய்கிறது. உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனையை அன்புடன் வரவேற்கின்றேன்!