அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • பொதுவாக வலைத்தளம் என்றதுமே ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அல்லது அதிகம் பேசப்படும் ஏதேனும் ஒரு மொழியில் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். தமிழை தாய் மொழியாகக் கொண்டதின் காரணமாகவும் மற்றும் இணையத்தில் அனைவரும் அவர் அவரது தாய் மொழியை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வலைத்தளம் தமிழில் அமைந்திருக்கிறது.

  • தகவல் தொழில்நுட்பம் ஒரு மொழியில் வளர்ச்சி அடைய வேண்டுமெனில் அம்மொழி பேசும் மக்கள் அம்மொழியினை எல்லாத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். அவ்வகையில், தொடர்புக்கொள்ள படிவத்தில் உள்ளிட தமிழ்99 அல்லது தமிழ் அஞ்சல் விசைப்பலகைகளை பயன்படுத்தலாம். இதில் தமிழ் அஞ்சல் ஒலிபெயர்வு விசைப்பலகையாகும். ஆங்கில எழுத்துகளின் வாயிலாகத் தமிழ் உள்ளீடுச் செய்யும் நபர்களுக்கு ஒலிபெயர்வு விசைப்பலகை எளிதாக இருக்கும்.

  • சுருக்கமான பதில் - ஆம். மேலும் விவரங்கள் குறித்த பக்கத்தில் தெளிவுப்படுத்தப்படும். தங்களின் விருப்பத்திற்கேற்பப் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

  • தங்களின் விருப்பம் மற்றும் நேரத்திற்கு ஏற்ப உதவி அளிக்கலாம். இது குறித்து அவ்வபோது வலைத்தளத்தில் தகவல அலளிக்கப்படும். எனவே அடிக்கடி வலைத்தளத்திற்கு வருகைத் தாருங்கள்!

  • வருந்தப்படுகிறது. அது அமைப்பின் இயல்புநிலை என்பதால் அதை மாற்ற இயலவில்லை.

  • வலைத்தளத்தின் வடிவமைப்பு, மொழியமைப்பு பற்றியக் கருத்துகள் பல நபர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் தமிழ் எழுத படிக்க பேச தெரிந்தவர்கள் மட்டுமல்லாத தமிழ் எழுத படிக்க தெரியாத நபர்களிடமும் பெற்று வரப்படுகிறது.

  • ஆம். தமிழை தாய் மொழியாக பேசுபவர்களிடமும், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கடிதப் பரிமாற்றம் தமிழில் இருக்கும். தனி நபர்கள் அவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஈடுபடவோ விலகவோ சுதந்தரமாக உள்ளனர்.