தோசை சாப்பிடலாமா?
கற்றல் கற்பித்தல் முறை
மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வகுப்பு அமைய வேண்டும். ஒரு மனிதன் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே ஒரு விஷையத்தில் கவனம் செல்லுத்த முடியும். ஆனால் உலகத்தின் பல பகுதிகளில் பாட சுமையைக் கருதி வகுப்புகளின் நேரத்தை அதிகப்படுத்தி வைத்திருப்பர். எடுத்துக்காட்டிற்கு உலகத்தின் சில பகுதிகளில் ஒரு வகுப்பு சுமார் 1 முதல் 2 மணி நேரத்திற்கு இருக்கக்கூடும். எனவே ஒரு தலைப்பை தொடர்ந்து 2 மணி நேரம் பாடம் எடுத்தால் மாணவர்களின் கவனம் சிதர வாய்ப்புள்ளது.
மானவர்களுக்கு பாடங்களை ஊட்டி-ஊட்டி கற்று தருவதற்கு பதிலாக அவர்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் வளர்த்து சுயமாக சிந்தித்து புதிய கேள்விகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் அக்கேள்விகளுக்கான விடையயும் கண்டுப்பிடுக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.
மாணவர்களை சிந்திக்க வைக்க வேண்டுமெனில் வாழ்க்கையில் அவர்களுக்கு தொடர்புடைய தினசரி நிகழ்வுகள் மற்றும் விஷையங்களின் வாயிலாக கவனத்தை ஈர்பது மட்டுமல்லாமல் படிப்பு முடித்த பிற்கும் அவர்களுக்கு காலங்காலத்திற்கும் மனதில் ஆழமாக பதிந்துவிடும். என்னுடைய மென்பொருள் பொறியியல் வகுப்புகள் கிட்டத்தட்ட சமையலறை போல் இருக்கும்! பலருக்கு ‘நாம் சரியான வகுப்பில் தான் இருக்கின்றோமா?’ என்ற சந்தேகமே வந்துவிடும்! ஆனால் போக போக அவர்களுக்கு தொடர்பு தானாகவே புரிந்துவிடும். இவ்வாறு செய்வதின் மூலம் மாணவர்களின் ஆர்வம், கவனம் மற்றும் அதிக பங்கேற்பினை என்னால் காண முடிந்தது. இது மட்டும் அல்லாமல் உணவு போன்ற விஷையம் பல கலாச்சாரத்தை இணைக்கும் பணியயும் செய்தது. பலருக்கு தோசை புதிதாக இருக்கும், சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இறுதியில் மாணவர்கள் என்னிடம் வந்து கேட்பது “எப்போ தோசை சாப்பிட போகிறோம்?” என்று தானே தவிரே அவர்களுக்கு எப்பொழுது மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கேட்பதில்லை! படிப்படியாக அவர்களின் வளர்ச்சியை காணும் போது என்ககுள் எழும் மகிழ்ச்சிக்கு வார்த்தைகள் போதாது.