கோவில்கள் சுற்றுலா இடங்கள் அல்ல!

கோவில்கள் மட்டுமின்றி எந்த ஒரு வழிபட்டு இடமும் சுற்றுல்லாவிடமாகக் கருதப்பட கூடாது என்பது கருத்து. அப்படி என்றால் என்ன? எந்த ஒரு வழிபாட்டி இடங்களுக்கு சென்றாலும் அந்த மதத்திற்குரிய பழக்க-வழக்கங்களை கடைப்பிடித்து அவ்வாறு நடந்துகொள்வதே சிறந்த பண்பிற்கு அடையாளம் எனாலாம். இது இந்துக்கள் தங்களுடைய திருக்கோவில்களுக்கு சென்று வழிபடுவோருக்கும் பொறுந்தும்.

மார்கழி மாதம் காலையில் ஏழு மணிக்கு கோவில் போனால் சூடா பொங்கல் கிடைக்கும்!

கீதையில் கண்ணன் சொல்வது என்னவென்றால் மாதங்களிலே பிடித்த மாதம் மார்கழி மாதம். அந்த மார்கழித் திங்கள் அன்று நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

என்று திருப்பாவை பாசுரத்திற்கேப நடந்துகொள்ள வேண்டும் என்பது பொருள். இதை ஊட்டி பிள்ளைகளை வளர்பது பெற்றோர்களின் கடைமையாகும். ஆனால் பிற்காலத்தில் அந்த பிள்ளைகள் இதை கேட்காமல், இதை உணராமல் செயல்பட்டார்கள் என்றால் அது சமுதாயத்திற்கு நல்லதல்ல.

பல கோவில்கள் செல்லும் போது நான் பலரை பல வித பேச்சுகள், செயல்களுடன் பார்த்திருக்கின்றேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உடை அணிவது இல் இருந்து, எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்ற வரைக்கும் கோவில்களில் ஆங்காங்கே அறிவிப்புப்பலகைகள் வாயிலாக நினைவூட்ட வேண்டி இருக்கு.

சுற்றுலாவிற்கு வருவோர் கோவிலுக்கு வரலாம் ஆனால் சுற்றுலாவிற்கு வருகின்ற காரணத்தினால் கோவில்கள் சுற்றுலாவிடமாக மாற்றிவிட முடியாது.

உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துகளை பகிர அன்போடு அழைக்கின்றேன்!

Previous
Previous

பானி பூரியின் சுவைகளும் அதன் வகைகளூம்!

Next
Next

தோசை சாப்பிடலாமா?