பானி பூரியின் சுவைகளும் அதன் வகைகளூம்!

பாணி பூரி பல இடங்களில் பல விதமாக வழங்கப்படுகின்றது.எந்த இடத்திற்கு சென்றாலும் சிற்றுண்டி வகையில் நான் முதலில் கேட்பது பாணி பூரி தான்!

பீகாரில் இருந்து எனக்கு பாணி பூரி பரிச்சயம். சிறு வயது முதல் தவறாமல் நாள்தோறும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி வகை பாணி பூரியாகும். எந்த இடத்திலும் எந்நேரத்திலும் ‘பாணி பூரி சாப்பிடலாமா?’ என்று கேட்டால் வயிறு முட்ட சாப்பிட்டிருந்தாலும் “சாப்பிடலாமே!” என்று தான் நான் இன்று வரை சொல்லுவேன்! அப்படி என்ன தான் இருக்கு அதுல?

முறு முறுனு பூரி, அதுக்குள்ள வேக வைத்தக் உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை, வெங்காயத்தைச் சேர்த்து, புளி, பச்சைமிளகாய், கொத்தமல்லியால் தயாரிக்கப்பட்ட புளிப்பு கலந்த காரத்துடன் தண்ணி (இந்தியில் பானி). அதில் கிட்டத்தட்ட நாக்கை அடிமையாக்கும் எல்லா சுவைகளும் ஒரே நேரத்தில் கிடைக்கும். அது தான் பானி பூரியின் சிறப்பு என்பேன்!

பானிப்பூரியின் வகைகள்

எல்லா இடங்களிலும் பானி பூரி ஒரே சுவையில் கிடைக்குமா என்று கேட்டால் - இல்லை என்று தான் அதற்கு பதில். பீகாரில் பானி பூரி ஒரு மாதிரி இருக்கும், தில்லியில் கிடைக்ககூடிய பானி பூரியில் வேறு சுவை, மும்பையில் வேறு, சென்னையில் வேறு சுவைகள் கிடைக்கும். அடிப்படை ஒன்று என்றாலும் கூட அந்தந்த கலாச்சாரத்திற்கேற்ப சில மாற்றங்களை செய்து பானிபூரி என்ற பெயரில் விற்கப்படுகிறது. ஒரு எடுத்துக்காட்டிற்கு சென்னையில் சில இடங்களில், பட்டாணியைச் சேர்ப்பார்கள், இலண்டனில் ஒரு கடையில் பானி பூரி சாப்பிட்ட போது வெறும் கொண்டக்கலை போட்டு, புளித்தண்ணி ஊற்றி கொடுத்தார்கள். உருளைக்கிழங்கு கண்ணுக்கே தெரியல. இத்தனைக்கும் இலண்டனில் உருளைக்கிழங்கு தாராளமாக கிடைக்கும்! பின்பு தெரிய வந்தது அவர் கஷ்மீரைச் சேர்ந்தெவர் என்று. அதுனால் தான் அவ்வாறு செய்துத்தரப்பட்டது. கார்டிஃபில் பானி பூரி சாப்பிட்ட போது, கடலையும் பொறியையும் இனிப்புடன் கலந்து பூரிக்குள் போட்டு கொடுத்தார். மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இலங்கையின் பானி பூரி!

மேல் காண்கின்ற பானி பூரி இலங்கையில் சப்பிட்டேன். மிகவும் வித்தியசமாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு பூரிக்கும் தனித்தனியாக ஒரு கோப்பையில் அதற்குரிய “பானி”. சுவை சுமார் தான் என்றாலும் கூட அதை ரசித்தேன்.

எத்தனையோ வகையான பானிப்பூரி சப்பிட்டிருக்கின்றேன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த வகை பீகாரின் பானி பூரி தான். நீங்கள் பீகாருக்குச் சென்றால் மறக்காமல் தெருவோர பானிப்புரியைச் சாப்பிட்டு பாருங்கள்.

உங்கள் பானி பூரி அனுபவங்களை தமிழில் பகிர அன்போடு அழைக்கின்றேன்!

Previous
Previous

சதாப்தி ரயில் அனுபவம்

Next
Next

கோவில்கள் சுற்றுலா இடங்கள் அல்ல!