சதாப்தி ரயில் அனுபவம்

பெங்களூருவில் இருந்து புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் வரை!

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் ஓடுகின்றன. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பலத் தரப்பட்ட வகுப்புகள் ரயிலில் காண முடியும். பணவசதிக்கேற்ப ஒருவர் எந்த வகுப்பிலும் செல்லலாம்! சிலர் முதல் வகுப்பு அந்தஸ்துடன் தொடர்புப்படுத்துவர் வேறு ஒரு சிலர் முதல் வகுப்பு சொகுசுடன் தொடர்புப்படுத்துவர். இந்தியாவில் பலருக்கு முதல் வகுப்பு ஒரு கனவாகவே இருக்கும் ஆனால் முதாலம் வகுப்பில் சென்று பழகிவர்கள் இரண்டாம் வகுப்பில் பயணித்தால் தான் மெய்யான இந்தியாவை காண முடியும். வேகத்தை அடிப்படையாகக் கொண்டு ரயில்களை வகைப்படுத்தும் போது சதாப்தி, இராஜ்தானி ரயில்கள் மிக பழமையான ரயில்கள் என கூறலாம். சில வழித்தடங்களில் ஏறத்தாழ இருபது, முற்பது ஆண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. அவ்வகையில் பெங்களூரு- சென்னைக்கிடையே சதாப்தி அதிவேக விரைவு வண்டி வாரத்திற்கு ஆறு நாள்கள் ஓடுகின்றது.

குரோதி வருடம் சித்திரை மாசம் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை இந்த வண்டியில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. பெங்களூருவில் இருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னைக்கு பதினொன்று மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பெரும்பாலும் சரியான நேரத்தில் வந்தடையும் என்கின்ற காரண்த்தினால் நான் இந்த ரயிலை தேர்ந்தெடுத்தேன். மேலும், இந்த ரயிலில் அனைத்துமே குளிரூட்டும் பெட்டிகள் இருப்பதால் முதலாம் வகுப்பை அனுபவித்து தான் பார்ப்போமே என்று நினைத்து இருக்கை முன்பதிவு செய்யப்பட்டது.

மேலான அனுபவம் மற்றும் தர மதிப்பீடு

தூய்மை, சுகாதாரத்தின் அடிப்படையில் ⭐⭐⭐⭐

சாப்பாடு: ⭐⭐⭐⭐

சேவை: ⭐⭐

வந்தடைவதில் காலதாமதம்: ⭐⭐⭐⭐⭐

தமிழ்மொழி பயன்பாடு: ⭐ (ஒன்று கூட கொடுக்ககூடாது!)

பெங்களூருவில் சதாப்தி அதிவேக விரைவு வண்டி

காலை உணவு, ரவை உப்புமா, சாம்பார், சட்னி மற்றும் எனக்கு பிடிக்காத பிரெட்!

ஆயிரம் தான் இருந்தாலும் ரயில் அனுபம் ஒரு தனி அனுபவம் தான்! எனக்கு மிகவும் பிடிச்ச ஒரு போக்குவரத்தும் கூட!

உங்கள் அனுபவங்கள்/ கேள்விகளை பகிர அன்புடன் அழைக்கின்றேன்!

Next
Next

பானி பூரியின் சுவைகளும் அதன் வகைகளூம்!