ஏர் இந்தியா விமான அனுபவம் 🤞🏻

விமானத்தில் பயணம் செய்வது என்பது இன்றும் பலரின் கனவாகவே இருக்கின்றது. சில விமானங்களில் பயணம் செய்ய மாட்டோமா என்று நாம் ஏங்குவது உண்டு. அதே போல, இலவசமாக பயணிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சில விமானங்களில் பயணம் செய்யக்கூடாது என்று நாம் அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதும் உண்டு.

உள்நாடு வெளிநாடு என கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட விமானங்களில் நான் பயணம் செய்திருக்கின்றேன். அதில் ஏர் இந்தியாவும் ஒன்று. ஆனி மாதத்தில் இந்தியாவிற்கு செல்ல ஏர் இந்தியாவை தேர்வு செய்ய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.

விமானம் இரவு 8 மணி 30 நிமிடங்களுக்கு புறப்பட உள்ளது. ஆனால் மாலை ஆறு மணிக்கு விமான நிலையத்திற்கு சென்ற போது அங்குள்ள ஊழியர் வந்து அனைவருக்கும் “விமானம் நாளை மாலை 5 மணிக்கு புறப்படும்” என்று அறிவித்து மேலும் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் ஏர் இந்தியாவை தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவித்து சென்றுவிட்டனர். விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் எங்கெங்கேர்ந்தோ வந்திருந்தார்கள். இச்ச்செய்த்தி கேட்டவுடன் அவர்கள் திரும்ப வீட்டுக்குச் சென்று மறு நாள் வரலாம் என்று முடிவெடுத்து சென்றார்கள். நானும் அவ்வாறு முடிவெடுக்க சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

அடுத்த நாள் குறித்த நேரம் மாலை 5 மணிக்கு புறப்பட்டது. ஆனால் விமானத்தில் ஒன்றுமே வேலை செய்யவில்லை. இருக்கையோ பழுதடந்த நிலையில் இருந்தது. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை, விமானப்பணியாளரை அழைக்க வேண்டுமெனில் தொலைக்காட்சித்திரையின் வாயிலாக தான் அழைத்தாக வேண்டும். விமானப்பணியாளரிடம் கேட்டப் பொழுது அவர் “அது தான் உங்களுக்கு அடுத்தவரின் திரை வேலை செய்யற்து இல, அதை பயன்படுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு அவர் போயிட்டாரு. ஆனால் நாம் பயணச்சீட்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மட்டுமே செலுத்துவது கிடையாது. அதற்குரிய சேவைகளுக்கும் சேர்த்து தான் செலுத்துகின்றோம்.

விமானம் தரை இறங்கியதுடன் பொருட்கள் வந்த்டைய காலதாமதம் ஏற்பட்டதால் இணைப்பு விமானம் புறப்பட்டுவிட்டது. இந்த மாதிரி ஒரே பயனத்தில் இரண்டு விமானங்களை விட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இறுதியில் சென்னை வந்தடைய இரவு 11.30 ஆகிவிட்டது ஏறத்தாழ 24 மணி நேரம் காலத்தாமதத்திற்கு பிறகு. இந்த அனுபவத்திற்கு பிறகு இவ்விமானத்தை தவிர்த்தாக வேண்டும் என்று முடிவெடுக்க கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தங்களுடைய இது போன்ற அனுபவங்களை பகிர அனுபுடன் அழைக்கின்றேன்.

Next
Next

சதாப்தி ரயில் அனுபவம்