ஜிப்ரால்டர் பயணக் குறிப்புகள்
ஸ்பேனைத் தொடும் நகரம் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கு என்று நினைக்கின்றேன்! இது பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஒரு பகுதி ஆகும். தன்னாட்சி பெற்ற பகுதி என்று சொல்லலாம். இலண்டன், பிரிஸ்டல், பர்மிங்ஙம் போன்ற நகரங்களில் இருந்து தினசரி விமான சேவைகள் உண்டு. சில அடிப்படை தகவல்கள் கீழ்காணுக:
இலண்டனில் இருந்து பயண நேரம்: சுமார் மூன்று மணி நேரம்
விமானக் கட்டணம்: சுமார் £120 ஒருவருக்கு. இது காலத்திற்கேற்ப மாறக்கூடியது.
ஜிப்ரால்டர் அலுவல் மொழி: ஆங்கிலம்
ஜிப்ரால்டரில் பேசப்படும் மொழிகள்: ஆங்கிலம், ஸ்பேனிஷ்
ஜிப்ரால்டர் நாணயம்: பௌண்டு
மலையில் இருந்து நகரக்காட்சி
நாங்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் காலை பதினொன்று மணி போல் தரையிறங்கினோம். அதன் பின் நாங்கள் விமான முனையத்தின் வாசலில் இருந்து நகரப்பேருந்துவில் எங்கள் தங்கும் விடுதிக்கு அருகில் சென்றிறங்கினோம். ஜிப்ரால்ட்டர் விமான நிலையத்தில் இருந்து வெளிய வந்ததும் நேரைல் பார்த்தோம் ஸ்பெயின் நாட்டின் கொடி தெரிந்தது! அப்போதுதான் நாங்கள் அறிந்தோம் அது ஸ்பெயின் நாட்டின் எல்லை என்று! விமான நிலையத்தில் இருந்து ஐந்து நிமிடங்களில் கால்நடையாக சென்றுவிடலாம் ஸ்பெயினுக்கு! ஆனால் “பிரெக்ஸிட்”க்கு பிறகு அது அவ்வளவு எளிதன்று என்று அறிந்தோம். இருப்பினும் இந்த அனுபவத்திற்காகவே ஒருமுறை செல்ல வேண்டும் என்பேன்!
பிரிட்டனைப் போலவே ஜிப்ரால்டரிலும் மதியத்திற்கு மேல் தான் தங்கும் விடுதிகளில் உள்நுழைய அனுமதி கிடைக்கும். எங்களிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இருந்தன. எங்களுக்கு உடமைகள் கம்மி என்பதால் சற்று அக்கம்-பக்கம் சுற்றி பார்க்க முடிந்தது. அவ்வளவு சுமை தெரியவில்லை. அங்கு ஏறாளமான சைவ/ வீகன் உணவகங்கள் உள்ளன. எனவே சாப்பட்டிற்கு பிரச்சனை இல்லை! இன்னும் சொல்ல போனால் கனிசமான அளவிற்கு இந்திய உணவே கிடைக்கும்! ஆனால் சாப்பட்டை பொறுதவரையில் சற்று விலை அதிகம் என்று சொல்லுவேன்.
ஊரு என்று பார்க்கப்போனால் அது மிகக்குட்டி ஊருனே சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நடந்தே பார்த்துவிடலாம்! இருந்தாலும்கூட பேருந்து வந்த நல்லாவே இருக்கு. நாங்கள் ஒரு நாள் பயணச்சீட்டு வாங்கிவிட்டு பேருந்துவில் சுற்றிப்பார்த்தோம். பல நேரங்களில் பல இடங்கள் நாங்கள் நடந்தே சென்றோம். நகரத்தில் மைய்ய பகுதியில் கடைகள் உள்ளன, பல்பொருள் அங்காடி மற்றும் ஏறாளமான உணவகங்ககள் இருக்கின்றன.
பாறைக்கும் கடலுக்கும் இடையில் நகரம் அமைந்திருப்பதால் ஒரு பக்கம் பாறை மற்றொரு பக்கம் கடல். பாறை அல்லது மலையிலும் மக்கள் வசிக்கின்றனர். அதுமட்டும் இன்றி குரங்குகள் போன்ற உயிர் இனங்களையும் காணலாம். கீழில் இருந்து மேலே செல்ல “ரோப்கார்” உள்ளது. கடலின் அழகை சரித்துக்கொண்டே செல்ல வேண்டு என்றால் “ரோப்கார்” மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் வானிலையைப் பொறுத்து “ரோப்கார்” சேவையை தீர்மானிக்கப்படுகிறது. மோசமான வானிலை அல்லது அதிவேக காற்றின் போது “ரோப்கார்” சேவை ரத்தாககூடும்.
மலைப்பகுதிகளில் காணப்படும் ஜிப்ரால்டர் குரங்கு!
நாங்கள் இரண்டாவுது / மூன்றாவுது நாளில் தான் மலை உச்சிக்கு செல்ல திட்டமிட்டோம். “ரோப்கார்” பகுதி வரைக்கும் பேருந்து வசதி உள்ளது. அதற்கு அருகில் மகிழுந்து சேவையும் உள்ளது. எங்களுக்கு அன்றைக்கி நல்ல அதிர்ஷ்டம் போல எங்களுக்கு குறைந்த விலையில் மகிழுந்து கிடைத்தது! ஓட்டுநர் அப்பகுதியின் வரலாறு மற்றும் கதைகள் சொல்லிக்கொண்டே வந்தார். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுக்கச் சொன்னார். மொத்த சுற்றுல்லா ஏறத்தாழ இரண்டு மணி நேரம் எடுத்தது. மலை உச்சியில் “ஸ்கை வாக் “ என்று ஒன்று இருக்கிறது. அங்கிருந்து நகரத்தை கண்டு மகிழலாம். ஒரு பக்கம் ஸ்பெயின், மறு பக்கம் ஆபிரிக்காவென கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நல்ல காட்சிகள்.
உலகப்போர் காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட குகைகள் அருங்காட்சியகமாக உள்ளது. அதே போல் குகைக்குள்ள கச்சேரி நடைபெறும் அளவிற்கு நல்ல ஒளிவசதியுடன் மற்றொரு குகையை சுற்றிப் பார்க்கலாம். ஆனால் செல்லும் இடமெல்லாம் நறையா குரங்குகளையும் பார்க்கலாம்! நான் பல நாடுகளில் பல குரங்குகளை பார்த்திருக்கின்றேன் ஆனால் ஜிப்ரால்டர் குரங்கு தனி தான்!
மலையில் இருந்து நேரத்தை பொறுத்து உடல் ஆரோக்கியத்தை பொறுத்து கீழே நடந்து கூட வரலாம். நாங்கள் பாதி வழியில் இருந்து கீழே நடந்தே வந்துவிட்டோம். வரும் வழியில் ஒரு இடத்தில் இருந்து இகதன் வரும் நேரத்திற்கு அங்குச் சென்றால் விமானம் தரையிரங்குவதை ஒளிப்பதிவுச் செய்யலாம். ஆனால் நாங்கள் சென்ற போது எந்த விமானமும் தரையிரங்கவில்லை என்பதால் அந்த வாய்ப்பினை பயன்படுத்த முடியவில்லை!
மலையில் இருந்து இறங்கி வரும் படிக்கெட்டுகள்
வரும் வழியில் அங்குள்ள வீடு அமைப்புகளை பார்க்கவும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. எப்படி தான் தினந்தோறும் மக்கள் இவ்வளவும் படிக்கெட்டுகளை ஏறி இறங்குவார்களோ என்று யோசித்தேன்! ஆனால் அங்கு வாழ்பவர்களுக்கு அது இயல்பாகவே ஆகிவிடும். இந்த வழியில் நடந்துச் சென்றால் நகரத்தின் வணிகப்பகுதிக்கு கொண்டு விடும். அற்புதமான அமைப்பு. யாரையும் கேட்க தேவை இல்லை! நேர நடந்துக் கொண்டே போகலாம். ஆங்காங்கே வழிக்காட்டுகள் இருக்கும். அதன்படி நடந்து போனாலே நம்ம சென்றுவிடலாம்.
உலகத்திலியே அதிசியமான ஒன்று இந்த நகரத்தில் உள்ளது. அதுவும் சுற்றல்லா இடங்களில் ஒன்று! அது என்னவென்றால், விமான ஓடுபாதைக்கு குறுக்கே நடந்தே சென்று போகலாம்! விமானம் தரையிறங்கும் போதும் புறப்படும் போதும் ஓடுபாதை வாகனங்களுக்கும் பாதசாலிகளுக்கு மூடி வைக்கப்படும். அதன் பின் வாகனங்கள் விமான ஓடுபாதையை கடந்து செல்லலாம்!
என்ன வாங்குவது?
நான் அங்கிருந்து பெரிதும் ஒன்றும் வாங்கவில்லை. அங்கு வாங்குவதைவிட அந்த இடத்தை சுற்றி அனுபவிக்க தான் அங்கு அதிகம் உள்ளது. அதே நேரத்தில் அந்த ஒன்றுமே வாங்க முடியாது என்பதெல்லாம் இல்லை. அங்கு கிடைப்பது ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் கிடைக்கும் எனவே தனித்துவமான பொருள் என்பதொன்றும் கிடையாது.
எங்கு சாப்பிடுவது?
சாப்பாட்டை பொறுத்த வரை கொஞ்சம் விலை உயர்வாக தான் இருக்கு என்று உணர்ந்தேன். இந்திய உணவகங்கள் அங்கு கனிசமான அளவில் உள்ளது. ஆனால் பல நாடுகளின் உணவுகள் அங்கு கிடைப்பதால் எல்லாமே சுவைத்து பார்க்கலாம்.
எங்கு தங்குவது?
ஜிப்ரால்டரில் தங்கும் விடுதி மாதத்தைப் பொறுத்து விலை ஏற இறங்கச் செய்யும். ஆனால் பொதுவாகச் சொல்ல வேண்டு என்றால் விலை அதிகம் தான். அதுனால நாங்கள் “ஸ்டுடியோ” எடுத்துக்கொண்டோம். விடுதிக்கு கீழ உணவகம் இருந்தது. அருகில் பேருந்து நிறுத்தம் மற்றும் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியும் இருந்தது.
நாங்கள் மொத்தம் நான்கு நாள்கள் இருந்தோம். ஆனால் ஊரைச் சுற்றி பார்க்க இரண்டு நாள்கள் போதுமானது என்று நினைத்தோம். ஆனால் ஓய்வுக்கு வரவேண்டும் என்றால் நான் நிச்சயமாக ஜிப்ரால்டரை பரிந்துரைப்பேன். இன்னும் சொல்லப்போனா வருடாவருடம் ஒரு முறை வந்துச் சென்றாலும் எனக்கு சலிக்காத ஊரில் ஒன்று ஜிப்ரால்டர்!
நினைவிற் கொள்க
ஜிப்ரால்டரில் இருந்து மொரொக்கோ அருகில் உள்ளது. எனவே ஒரு நாள் பயணமாக சென்று வரலாம். அதே போல ஸ்பெயின் எல்லை ஊருக்கு செல்லலாம் ஆனால் அங்கு ஏதேனும் முன்பதிவு வைத்திருக்க வேண்டு என்று உள்ளூர் மக்கல் கூறினர். “அப்படியே ஸ்பெயின் போயிட்டு வரலாமே” என்று நினைக்க வேண்டாம்! ஐரோப்பாவின் கடைசி இடமும் அங்கு உள்ளது எனவே அங்கு சென்று புகைப்படம் எடுக்க மறக்காதீர்!
ஐரோப்பாவின் கடைசி நிலப்பகுதி என்று அழைக்கப்படுகிறது!