அவந்தி வெஸ்ட் கோஸ்ட் அனுபவம்!


யூகேவில் பல தொடர்வண்டிகள் உள்ளன. யூகே பற்றி அறியாதவர்களுக்கு சொல்லவேண்டும் என்றால் இங்கு தொடர்வண்டிகள் தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளன. அதாவுது நிறுவங்கள் இரயில் சேவை, பராமரிப்பு போன்ற்வைக்கு பொறுப்பு. அதுனால தான் இங்கு பயணச்சீட்டு கட்டணம் மிக உயர்வாக இருக்கும். நான் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை! சில வேளைகளில் தெற்கு இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லேண்ட் போவதற்கு நாம் இலண்டனில் இருந்து சென்னைக்கே சென்றுவிடலாம்! ஆனால் திட்டமிட்டால் குறைந்த விலையிலும் பயணிக்கலாம்.

யூகே இரயில்களில் பொதுவாக இரண்டு வகுப்புகள் இருக்கும்- சாதாரண வகுப்பு மற்றும் முதலாம் வகுப்பு. சாதாரண வகுப்பிற்கும் முதலாவுது வகுப்பிற்கும் பெரிதும் வித்தியாசம் இல்லை என்று பலரும் சொல்லுவர். ஆனால் கட்டணத்தை பொறுத்த வரை இரண்டு அல்லது மூன்று மடங்கு வரை வசூலிப்பதை நம்மால் பல நேரங்களில் காண முடியும். ஆனால் ஒன்றும் இல்லாமலா மூன்று மடங்கு என்று நீங்கள் யோசிக்கலாம். முதலாம் வகுப்பில் செல்வதுனால் முக்கிய பயன் என்னவென்றால் இரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரயில் நிலையத்தில் உள்ள முதலாம் வகுப்பு காத்திருப்பறையில் இலவசமாக அனுமதி பெறலாம். அங்கு தேநீர், குளம்பி, பழச்சாறு போன்றவை இலவசமாக குடிக்கலாம்/ சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, குளியறை வசதியும் சில இரயில் நிலையங்களில் உள்ளன. இது போன்ற வசதிகள் முதலாம் வகுப்பில் பயணித்தால் கிடைக்கும். ஆனால் அதுக்கு இரண்டு மூன்று மடங்கு கொடுக்க வேண்டுமா என்று தோன்றும்! இதுல போடற காசு வேற எதுக்காவுது பயன்படுத்தலாமே? ஆனால் அனுபவம் வேண்டும் என்றால் அந்த விலை கொடுத்துதான் ஆகவேண்டும். என்ன பொறுத்த வரையில் நாம் அனுபவத்திற்கு பணம் கொடுக்கறோமேதவிர வேறு எதுக்கும் இல்லை! ஆனால் விளம்பரப்படுத்தப்பட்ட அனுபவம் கிடைக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் பணத்தை திரும்பப் பெறுவது தவறொன்றும் இல்லை என்பது என்னுடைய கருத்து. “கிரேட் வெஸ்டர்ன்”இன் முதலாம் வகுப்பு சேவையிலும் பயணம் செய்திருக்கின்றேன். பல நேரங்களில் அங்கு சரியான சேவையோ உணவோ வழங்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் பின்னல யார் நிற்பது என்பதின் காரணமாக நான் முன் கூறின மாதிரி பணத்தைத் திரும்பப் பெற முயற்சிகள் எடுத்தத்தில்லை! பயணம் செய்ததில் “அவந்தி வெஸ்ட் கோஸ்ட்” சேவை தான் மிக சிறந்த காரணத்தினால் நான் இந்த பதிவை இடுகின்றேன்.


இலண்டன் கிளாச்கௌ

இச்சேவையில் நான் முதலில் பயணம் செய்த வழித்தடம் “ரெக்சாம்”வில் இருந்து “க்ளாண்டிட்னோ” வரையாகும். அப்போதுதான் இச்சேவையில் மிக நீண்டப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது, எப்போதும் எதாவுது அனுபவித்தால் “ஆஹா! இன்னும் சற்று நேரம் இருக்க மாட்டோமா” என்று இருக்க வேண்டுமே தவிர “ஐயோ! எப்போடாப்பா முடியும்” என்று இருக்கக்கூடாது என்று நான் நினைப்பேன். என்னை பொறுத்த வரை அது தான் ஒரு தரமான சேவை/ அனுபவம் என்பதற்கும் ஒரு அறிகுறி. அதற்காக தான் நான் இலண்டனில் இருந்து கிளாச்கௌ வழியை தேர்ந்தெடுத்தேன்!

சுருக்கம்

மொத்த பயண நேரம்: கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம்

மொத்த தொகை: £120 முதல் (வாரங்களுக்கு முன் முன்பதிவு செய்தால்) ஒரு வழி

புறப்படும் இரயில் நிலையம்: இலண்டன் இயூஸ்டன்

சேரும் இரைல் நிலையம்: கிளாச்கௌ சென்றல்


நாங்கள் காலை ஒன்பது முற்பது சேவையை தேர்ந்தெடுத்தோம். முன் குறிப்பிட்டது போல், நாங்கள் ஒரு மணி நேரம் முன்பாகவே சென்று காத்திருப்பு அறையின் வசதிகளை அனுபவித்தோம். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் சாப்பாட்டு வகைகள் கனிசமான அளவில் இருப்பதை காணலாம் ஆனால் சைவமாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்! எனவே தான் கூறினேன் காசும் கொடுத்து சாப்பிடவும் வழியில்லாமல் போவதற்கு இது தேவையா! அப்படிப் பார்த்தாலும்கூட சொகுசுக்கு அந்த காச் கொடுக்கிறோம் என்று மனசை தேத்திக்க வேண்டியதுதான்!

வண்டி புறப்பட்ட ஒரு அர்த்ய் நிமிடங்களுக்குள் எங்களுக்கு உனவுப்பட்டியல் கிடைத்தது. அதில் காலை சிற்றுண்டி, தேநீர், பழச்சார் வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.

எங்களுக்கு கிடைத்த காலை உணவு- தரமான உணவு, செம்மையான கவனிப்பு!


நாங்கள் பயணித்தப் பெட்டியில் கூட்டம் குறைவாகதான் இருந்தது. இரண்டு பேராக பயணித்தால் ஓரத்தில் இரண்டு இருக்கைகள் இருக்கும். நான் எப்போதும் அந்த இருக்கையைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைப்பேன். ஏனென்றால் எந்தவிதமான இடையூர்களும் இருக்காது. உங்களுக்கு என்ன விருப்பமோ செய்துகொள்ளலாம். இதை ரசித்து ருசிச்சு சாப்பிடவே நேரம் எடுத்துக்கொண்டோம். மேலும், சன்னல் வெளிய காட்சிகளின் ஆனந்தத்தையும் அனுபவித்து சென்றோம். அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவுது “குடிக்க எதாவுது வேண்டுமா?” என்று வந்து கேட்டனர். பேச்சு, பாட்டு, சன்னல் வெளியே அக்கம்-பக்கத்தின் கதைகள் இப்படியே பொழுது கழித்துவிட்டோம். மதிய உணவும் வந்துவிட்டது. ஏற்கனவே சொன்ன மாதிரி உணவுப்பட்டியலில் சாப்பிட நறையா இருந்தது ஆனால் நான் சைவம் என்பதால் அதிலிருந்து தேர்ந்தெடுக்க ஓரிரண்டு வகைகள் மட்டுமே இருந்தன.

மதிய உணவு- தரத்தையும் சுவையயும் குறை சொல்ல முடியாது!

அதன் பிறகு வழங்கப்பட்ட இனிப்பு வகை!


இடையில் தொழில்நுட்ப கோளாறின் காரணத்தினால் வண்டி காலத்தாமதமாக சென்றடந்தது. முதாலாம் வகுப்பில் பயணம் செய்வதால் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் சேருமிடத்தில் உள்ள காத்திருப்பறையையும் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்திகொள்ளலாம். நாங்களும் அதை பயன்படுத்திகொண்டோம். எல்லாமே சுமூகமாக இருந்தது. ஒரு தரமானப் பயணம் என்றே சொல்லுவேன். கண்டிப்பாக ஒரு முறை பரிந்துரைப்பேன். என்ன பொறுத்தவையில் யூகேவில்லுள்ள மிகச்சிறந்த முதலாம் வகுப்பின் அனுபவம் என்றே சொல்லலாம்.

கேள்வி/ கருத்துகள் வரவேற்கின்றேன்!

Next
Next

ஜிப்ரால்டர் பயணக் குறிப்புகள்