இலங்கை “ஏர்லைன்ஸ்” விமானம் அனுபவம்
தரமான சேவை, சுவையான உணவு! வேற என்ன வேண்டும்?
ஒரு நாட்டிற்கு செல்கிறோம் என்றால் அந்நாட்டின் தேசிய விமானத்தில் செல்ல வேண்டும். அப்போதுதான் அந்நாட்டின் கலாச்சாரத்தின் அறிமுகம் நக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றியும் அறிய நமக்கு ஒரு வாய்ப்பு. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் ஏர் இந்தியா இதற்கு ஒரு விதிவிலக்காக இருக்கும். ஆனால் பொதுவாக ஒன்று கவனித்தேன்- பலப்பேருக்கு அவரவர் நாட்டின் விமான சேவையானது பிடித்ததில்லை!
இலங்கை “ஏர்லைன்ஸ்” விமானம் பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து கொழும்புக்குச் செல்ல பயன்படுத்தினேன். இரண்டு முறையும் நான் முதலாம் வகுப்பில் தான் பயணித்தேன். எனவே என்னுடைய அனுபவமானது முதலாம் வகுப்பின் அடிப்படையில் இருக்கும்! ஆனால் எல்லாந் முதல் வகுப்பும் நன்றாக இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். சிலது சுமாராகதான் இருந்தன, வேறு சிலது அவ்வளவு பணம் கொடுத்தும் தரம் இல்லாத போல் தோன்றியது.
சென்னை, பெங்களூர் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து செல்லும் போது உயர் வகுப்பிற்காக ஒதுக்கப்பட்ட காத்திருப்பறையில் அனுமதி கிடைத்து. அதன் பின் விமானம் புறப்படும் போது, ஏறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இருக்கையில் அமர்ந்த உடன் பழச்சாறு மற்றும் உணவுப்படியலை வழங்கினர். இருக்கை மிக சொகுசாக இருந்தது. விமானம் வானில் செல்லும் முன்பே தமக்கு வேண்டிய உணவை சொல்லிவிட வேண்டும். இதில் அதிசியம் என்னவென்றால் நான் எதிர்பாராத, எளிதில் கிடைக்காத சில உணவு இவ்விமானத்தின் உணவுப்பட்டியலில் கண்டேன்- வாழத்தண்டு பச்சக்கறி!
பெங்களூரில் இருந்து கொழும்புக்குச் செல்லும்போது கொடுக்கப்பட்ட உணவு!
கொழும்புவில் இருந்து புறப்படும் போது அளிக்கப்பட்ட காலை உணவு!
சுருக்கம்
விமானப் பயண நேரம்: சுமார் ஒரு மணி நேரம்.
கட்டணம்: £120 முதல் £150 பருவத்தை பொறுத்து.
தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு சுமார் ஒரு மணி நேரம் கொண்டப் பயணம் என்பதால், சாப்பாடு நல்ல வயிறு நிறைய சாப்பிடலாம்! விலையைப் பொறுத்த வரை மற்ற விமானங்களைவிட சற்று அதிகமாகவே இருந்தது என்று சொல்லுவேன் ஆனால் காலதாமதிமின்றி புறப்பட்டது மற்றும் தரையிறங்கியது.
நீங்கள் இவ்விமானத்தில் பயணித்தீர்கள் என்றால் உங்களின் அனுபவங்களைப் பகிர அன்போடு அழைக்கின்றேன்!