ஆலடிப்பட்டியான் அனுபவம்- சென்னை
பர்கர், பிட்சா, பாஸ்தாவென தேடி போகும் காலத்தில் சுண்டல், கொழுக்கட்டை என தமிழ் நாட்டு பாரம்பரிய உணவை வெற்றிகரமாக வழங்கும் ஒரு உணவகம்
அலை மோதும் ஆலடிப்பட்டியான் உணவகங்ககளை கடந்து பல முறை சென்றிருக்கின்றேன். ஆனால் ஏதேனும் ஒரு கிளையில் நின்று என்னதான் இருக்கு அப்படினு சாப்பிட்டு பார்போமே என்று தோன்றினது இல்லை. ஆனால் ஒரு முறை என்னுடைய தமிழ்ப்பற்றை அறிந்து நண்பர்கள் என்னை இழுத்துக்கொண்டுச் சென்றனர் இவ்வுணவகத்திற்கு. ஆனால் தமிழ்ப்பற்று இருந்தால் தான் இங்கு வரணுங்கற அவசியம் இல்லை! பொதுவாகவே இந்தியாவில் குறிப்பாக தென்னிதிய நகரங்களான சென்னை, பெங்களூருவில் தென்னிந்திய உணவகங்களிலியே இப்போது பிட்சா, “சாட்”, மற்றும் ஏறாளமான வட இந்திய உணவுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது சரியா தவறா என்பது அல்ல வாதம். வணிக மயம் ஆகும் இக்காலத்தில் காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும்/ கிடைக்கணும் என்றவிதத்தில் அமைகிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு செய்யும் போது பார்ம்பரியம் சற்று தளர்ந்து போகிவிடுகிறதோ என்ற கேள்வியும் எழுகிரது. என்ன கடை போட்டாலும் கூட்டம் குறையாத அளவிற்கு மக்கள் இருக்கிறார்கள் என்றாலும்கூட, நம்ம மண்ணில் அதிகமாக அளவில் பார்ம்பரிய உணவும் குறைந்த அளவில் உலக உணவுகளின் உணவகங்கள் இருந்தால் அது ஆரோக்கியமான வளர்ச்சி என்று நான் சொல்லுவேன். அதற்கு பாரம்பரிய உணவுதான் எப்போதும் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்ல வரல!
உணவு- மொழி- மக்கள்- இடம் இதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. என்னுடைய அனுபவத்தில், “மரினா கடற்கரியில் சுண்டல் சாப்பிட்டேன்” என்று நான் ஒருவருக்குச் சொன்னான், நான் என்ன அனுபவைத்தேன் என்று ஒரு சென்னை தமிழனுக்கு தான் துல்லியமாக புரியும். நீங்க நினைக்கலாம் உணவுக்கும் மொழிக்கும் என்னத் தொடர்பென்று. கீழ்காணும் படத்தை பாருங்கள்.
இந்த மரத்தை பார்க்காத தமிழர் இருப்பாரோ? சரி அதைவிடுங்கள். இந்த மரம் அளிக்கின்ற பயண்களில் ஒன்றாவுது ஒரு முறையாவுது நம் வாழ்நாளில் சாப்பிட்டிருப்போம் அல்லது பயன்படுத்திருப்போம். இன்று சொல்லப்படுகின்ற “சஸ்டேனபிலிட்டி” என்றெல்லாம் நாம் காலங்காலமாக செய்து வத்னுகொண்டு இருக்கின்றோம். ஆலடிப்பட்டியான் உணவகத்திற்க்குள் இது போன்ற நறைய பாரம்பரியச் சார்ந்த தகவல்கள் இருந்தன. அது என்னை மிகவும் ஈர்த்தது. அதுவும் இத்தகவல்கள் அனைத்தும் தமிழில் இருந்தபடியால் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைந்தேன்! அத்துடன் சுவையும் தரமும் குறையாத சூடான உணவு சாப்பிடும் போது “ஆஹா! என்ன தவம் செய்தேனோ” என்று தோன்றும்!
பணியாரம், கொழுக்கட்டை, சுண்டல்…!
உணவகத்திற்குள் சென்றால் அப்படியே கிராம்மித்தில் இருக்கின்ற மாதிரி தோன்றும்! எளிமையான வடிவமைப்பு நமது பாரம்பரியத்தை நினைவூட்டும் விதத்தில் அமைந்திருக்கின்றது. சென்னை முழுவதும் கிளைகள் உள்ளது. இது போன்ற பார்ம்பரிய உணவகங்கள் மேலும் மேலும் மலரட்டும். வெளிநாட்டில் வாழும் ஆயிரக்கணக்கானத் தமிழர்களுக்கு இது போன்ற உணவகங்கள் மற்றும் அனுபவங்கள் தான் மண்ணின் தொடர்பை வலுப்படுத்தும். ஆயிரம் தான் சொன்னாலும், தமிழ் பார்ப்பதிலும் கேட்பதிலும் சுவைப்பதிலும் தமிழ் இனிதே! இனி வருங்காலங்களின் நான் சென்னைக்கு வந்தால் ஆலடிப்பட்டியான் தவிர்க்க கூடாத உணவகம் பட்டியலில் ஒன்றாகும்!
நீங்கள் சென்றிருந்தீர்களென்றால் உங்கள் அனுபவங்கள் மற்றும் பிடித்த உணவைப் பற்றி பகிர அன்போடு அழைக்கின்றேன்!