துருக்கியின் உலகப்புகழ்பெற்ற காஃபி…

செய்முறை மற்றும் வரலாறு தான் இதன் சிறப்பம்சமாகும்.

மேலுள்ள புகைப்படம் பார்க்கும் போதே பலரால் சொல்ல முடியும் இது வலைகுடா பகுதியைச் சார்ந்த கலாச்சாரம் என்று குறிப்பாக அலங்காரப்படுத்தப்பட்ட விளக்குகள் பார்த்தாலே துருக்கி என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு கலாச்சரத்திற்கும் அக்கலாச்சாரத்தை உலகத்திற்கு எடுத்துக்காட அல்லது அறிமுகப்படுத்த ஒரு சின்னம் அல்லது முத்திரை இருக்கும். அவ்வகையில் துருக்கிக்கு பல சின்னங்கள் அல்லது முத்திரைகள் இருந்தாலும், துருக்கி விளக்கு மற்றும் துருக்கி குளம்பி உலகப் புகழ்பெற்றவை. இப்பதிவில் எங்களுக்கு பகிரப்பட்ட தகவல்களைப் பகிர்கின்றேன்.

குளம்பிக்கொட்டை பொதுவாக எல்லாந் நாடுகளிலும் கிடைக்காது. இந்தியா, ஆஃப்ரிக்க நாடுகள் மற்றும் தெற்கமெரிக்க பகுதியின் ஒரு சில நாடுகளில் தான் குளம்பிக்கொட்டை கிடைக்கும். இதிலும் பல வகைகள் உண்டு. இந்தொனேஷியாவின் பாலியில் உள்ள “லுவாக்” குளம்பிக்கொட்டை வகை தான் மிக சிறந்தவை என கருதப்படுகின்றது. ஆனால் இந்தியா போல் சில நாடுகளில் தான் குளம்பிக்கொட்டையும் கிடைக்கின்றது மற்றும் குளம்பிக்கும் (காஃபி) பெயர் வாய்ந்தது. “டேஸ்ட் அட்லெஸ்” வரிசையின்படி உலகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது தமிழ் நாட்டின் ஃபில்டர் காஃபி என்பதை மறந்துவிடக்கூடாது. அதே துருக்கியின் காஃபி ஆறாவுது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலமாக ஒன்று சிறந்தது மற்றொன்று தாழ்ந்தது என்பதல்ல. எல்லாந் குளம்பி வகைகளும் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பானவை, அனுபவிக்க வேண்டியவை. இதை நான் ஏன் இப்போ சொல்கிறேன் என்றால் தென்னிந்திய அல்லது தமிழ் நாட்டு காஃபியின் சிறப்பை உணராத நம்மில் சிலர் “காப்பச்சீனோ” “எஸ்பிரெசொ” போன்றவையை நோக்கி செல்கின்றனர். மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தியாவில் குளம்பிக்கொட்டையும் பெயர் வாய்ந்தது, குளம்பி செய்முறைக்கும் பெயர் வாய்ந்தது. உலகத்தில் மிக குறைந்த நாடுகளில் இரண்டுக்கும் பெயர் வாய்ந்திருக்கும் அதில் இந்தியாவும் ஒன்று அதிலும் நம்ம “ஃபில்டர்” காஃபி ஒன்று. இதை நாம் பெருமையாக கருத வேண்டும்!

குளம்பிக்கொட்டை, இலவங்கம் மற்றும் ஏலக்காய்

குளம்பி தயாரிப்பதற்கான கருவிகள்


மேலுல்ள இரண்டு புகைப்படங்கள் துருக்கி காஃபி தயாரிக்கப் பயன்படுத்தப்படும். தரமான சுவை வேண்டுமென்றால் துல்லியமான அளவு ரொம்ப முக்கியம். நீண்ட பிடி கொண்டது செம்பில் தயாரிக்கப்பட்டதாகும். இது ரொம்ப முக்கியம். இது ஏன் முக்கியம் என்று பின்னர் அறிவீர்! முதலில் ஒன்பது கிராம் குளம்பிக்கொட்டைகளை எடுத்து அரைக்க வேண்டும். அதன் பின் அதில் தொண்ணூறு மில்லிகிராம் சூடானத் தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த அளவானது ரொம்ப முக்கியம். அதன் பிறகு அந்த செம்பை சூடான மண்ணில் வைக்க வேண்டும். சற்று நேரத்தில் அது பொங்கி வரும். பொங்கி வரவரைக்கும் காத்திருக்க வேண்டும். பொங்கி வந்த பிறகு, அதை ஒரு கோப்பையில் ஊற்றினால் துருக்கி காஃபி தயார்! ஆனால் அது ஊற்றும் போது மேலும் கீழுமாக நுரைகள் வரும் போல் ஊற்ற வேண்டும்.

குளம்பிக்கொண்ட செம்பு மண்ணில் புதைத்தபடி!


இவ்வாறு குளம்பி தயாரிப்பு தான் துருக்கியின் பாரம்பரிய முறையாகும். இன்றும் மக்கள் இது போன்று தயாரித்து குடிப்பதும் உண்டு. இம்முறையில் ஒரு அறிவியலும் ஒளிந்திருக்கிறது! செம்பு, மண்ணின் சூட்டினால் உள்ளிருக்கும் தண்ணி சூடாகி குளம்பி தயாராகிறது- அதாவுது முறைப்படி செய்தால்! அதற்கு தான் முன்பே கூறினேன் செம்பு மிக மிக முக்கியம் என்று. அந்தந்த நாட்டிற்கு சென்று அதைஅதை அவரவர்கள் முறையில் அனுபவிக்க வேண்டும் என்று நான் நினைப்பவன். அப்போதுதான் அம்மக்களின் சிந்தனைகள், வாழ்க்கைமுறை, தத்துவங்களை நாம் அறிந்துகொள்ளலாம், அனுபவிக்கலாம்.

துருக்கி குளம்பிக்கு பால் சேர்க்ககூடாது! அதே போல அளவும் கம்மியாக தான் குடிக்க வேண்டும். ஒரு நல்ல துருக்கி காஃபி கொஞ்சம் கசப்பாக தான் இருக்கும் அதற்கு தான் குள்ம்பியுடன் “டர்கிஷ் ஒனல்ட்” இனிப்பு வகையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கூடவே சாப்பிடுவார்கள்.

கேள்விகள் மற்றும் வேறு குளம்பி முறைப் பற்றிய தகல்வல்களை உங்களிடமிருந்து மகிழ்ச்சுயுடன் வரவேற்கின்றேன்!

Next
Next

ஆலடிப்பட்டியான் அனுபவம்- சென்னை