நடைமேடை 65!
ಪ್ರಯಾಣಿಕರೇ ದಯವಿಟ್ಟು....!
பெங்களூரின் வித்தியாசமான உணவகம்!
பெங்களூரின் பன்னர்கட்டா பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த உணவகம் தொடர்வண்டி நிலையம் போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வுணவகத்திற்குள் செல்லும் போதே ஏதோ தெடருந்து நிலையத்திற்குள் நுழையும் போல் இருக்கும்! நடைமேடை எண் 65 ஆக இருந்தாலும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் தொடருந்து நிலையத்தின் ஓவியங்கள், தொடர்வண்டிகளை காணலாம்.
பொதுவாகவே இந்த உணவகம் பரபரப்பாக காணப்படும் என கருதப்படுகிறது எனவே முன்கூட்டியே வருகைப் பதிவு செய்வது நன்றாக இருக்கும். மேலும் குறித்த நேரத்திற்குள் செல்வது மிகவும் அவசியமானதொன்று. அடுத்தடுத்து வருபர்கள் காத்துக்கொண்டிருப்பர்.
எங்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டதின் காரணித்தினால் நாங்கள் சென்றடந்ததும் அங்குள்ள ஊழியர் எங்களை சற்று பொறுக்கச் சொன்னார். பின்னர் அவர் வந்து எங்களை ஒரு நல்ல மேசையில் அமர்த்திச் சென்றார். உணவு பட்டியல் கொடுத்த பத்து நிடங்களில் வந்து என்ன வேண்டும் என கேட்டுச் சென்றார்.
குட்டி தொடர்வண்டிகளின் வாயிலாக மேசையில் சாப்பாடு கொண்டு தருவதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்! சாப்பாட்டின் தரம் சுமாராக இருந்தாலும் உணவகத்தின் வடிவமைப்பிற்காகவே ஒரு முறை வரலாம் என சொல்வேன். சாப்பாட்டை பொறுத்த வரையில் இது சைவம் மற்றும் அசைவம் கலந்த உணவகமாகும்.
புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர இது ஒரு நல்ல உணவகமாகும்.
சுருக்கமாக:
உணவு: தென்னிதிய மற்றும் வட இந்திய உணவு வகைகள்.
விலை: ஒருவருக்கு சுமார் 500 முதல் 700 ரூபாய் வரை கணக்கு வைத்துக்கொள்ளலாம்.
இந்த அருமையான அனுபவத்திற்கு என்னுடைய அன்புள்ள தம்பிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்!